வெட்டுவதும், குத்துவதும் தான் மண்வாசமா முத்“ஐயா”?

பாலிலிருந்து தண்ணீரை கூட பிரித்து எடுத்து விடலாம், ஆனால் இயக்குநர் முத்தையாவிடம் இருந்து குல பெருமையை பிரித்தெடுக்கவே முடியாது போல. நான் பார்த்ததை, நான் வளர்ந்த விதத்தை படமாக்குகிறேன் பேர்வழி என்று முத்தையா எடுத்து வைத்திருப்பதெல்லாம் வகை தொகையில்லாத வெட்டுக்குத்து படங்கள் தான். வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல அவர் உருவகப்படுத்துகிற “வீர வம்ச” நாயகர்களை வைத்து அவர் முன் வைக்கும் பிரச்சாரம் என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். தொடர்ந்து முத்தையா இது தான் என் […]

Continue Reading

கொடிவீரன் – விமர்சனம்!

சினிமாவை வெறும் சினிமாவா மட்டும் பாருங்க.. அலசி ஆராயாதீங்க! என்கிற வாதத்தின் பின்னால் நின்று கொண்டு தான் முத்தையா போன்ற இயக்குநர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். குட்டிப்புலி தொடங்கி மருது வரை முத்தையா எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே “மண்வாசனை” என்ற பெயரில் “ரத்த வாடை” கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. மிக நுணுக்கமான அவரது “கொம்பு சீவும்” வேலையை கொடிவீரன் படத்திலும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் “செய்திருக்கிறார்”. சரி.. இப்போது கொடிவீரனை வெறும் திரைப்படமாக மட்டுமே பார்ப்போம். முத்தையா படம், கண்டிப்பா […]

Continue Reading

மீசையை முறுக்கு.. சசி குமாரை நொறுக்கு!

முன்னோரு காலத்தில் நாட்டாமை வேடம் என்றாலே எல்லா இயக்குநர்களும் நேராக விஜய குமார் வீட்டிற்குப் போய் விடுவார்கள். விஜய குமார் முடியாதென்றால் தான் வினு சக்ரவர்த்தி, சண்முக சுந்தரம் எல்லாம்! அதேபோல் காதல் கதைகளோடு நவரச நாயகன் கார்த்திக் வீட்டின் முன்னால் காத்துக் கிடந்த இயக்குநர்கள் ஏராளம் ஏராளம். அந்த வகையில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் இருந்து “மண் பெருமை” பேசக்கூடிய கதைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உலவும் இயக்குநர்களின் முதல் தேர்வும், […]

Continue Reading