Tag: Lyricist
ஊடகங்களுக்கு கடிதம் எழுதிய பாடலாசிரியர்
பாடலாசிரியரான மதன் கார்க்கி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு, உங்களுக்கு நன்றி சொல்ல எழுதுகிறேன். பாடல் வெளியீட்டு விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் உங்களில் பலரை நேரில் காணும்போதும் புன்னகை பரிமாற்ற மட்டுமே நேரமிருக்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்களுக்கு நன்றி சொல்லாமல் மனம் நிறைவதில்லை. இந்த ஆண்டு 36 படங்களில் பணிபுரிந்து 98 பாடல்கள் எழுதியுள்ளேன். டூபாடூவின் திரைப்படங்களுக்கான பாடல் வங்கிக்காக பல்வேறு இசைக்கலைஞர்களுடன் இணைந்து 58 பாடல்கள் […]
Continue Readingபடப்பிடிப்பு இடைவேளையில் புத்தக வெளியீடு
2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்று வந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது, இயக்குநரும், வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் கவிதை நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற பிருந்தா சாரதியின் ஹைகூ […]
Continue Readingபுது வரலாறாக ‘மெட்ராஸ்’ கவிஞர் உமாதேவி!
தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா […]
Continue Reading