நிஜத்தில் கர்ணனாக மாரி செல்வராஜ் – கர்ணன் விமர்சனம்!

  தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாளுக்கு பிறகு மற்றொரு முக்கியமான தேவையான படமாக கர்ணன் திகழ்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்திலும் தான் சொல்லவரும் கருத்தை தெள்ளத்தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படியாக அருமையாக உருவாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் திரு. கலைப்புலி தாணு அவர்கள் மாரி செல்வராஜுக்கும் மிகப்பெரிய பலமாக உறுதுணையாக இருந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது. அசுரன் […]

Continue Reading

உலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்..!!

கோவா உலகத் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த திரைப்பட விழாவிற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்த்துவிட்டு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரத்தோடு படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக படம் முடிந்து வந்த பார்வையாளர்கள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் உள்ளிட்ட குழுவினரை கட்டிப்பிடித்து பாராட்டினர். மிகச்சிறந்த திறைப்படத்தை உருவாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் இந்தப் படம் இன்னும் பல்வேறு விருதுகளைப் […]

Continue Reading

சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்..!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.    படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.    இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் […]

Continue Reading

பரியனை வாழ்த்திய பிரம்மாண்ட இயக்குனர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’. கிராம வாழ்க்கையை, ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தினை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பெரும் நட்சத்திரங்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் வாழ்த்துக்களை பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படும் […]

Continue Reading

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேரும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

Continue Reading

பரியேறும் பெருமாள் அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேட்டி..!!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்குஅதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான்எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள்இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும்பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள்,வெயில் மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிறஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்  படம்பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.  பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.   கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம்என்னை உற்சாகமூட்டியதும் , தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாகஇருந்தது. எந்த  இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தபடத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும்  இந்த படத்தில் பெரிதும்எதிர் பார்க்கலாம்” என்றார்  உற்சாகமாக.

Continue Reading

நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான் – இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி!

  நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே.,கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் […]

Continue Reading