திருமணம் குறித்து வெட்கத்துடன் பதிலளித்த தாப்ஸி

கிரிக்கெட் வீரர் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இது இத்தாலியில் ரகசியமாக நடந்தது. இந்த நிலையில், இந்தி பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாப்சியிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. விரைவில் உங்கள் திருமணத்தை எதிர்பார்க்கலாமா? என்று நிருபர்கள் கேட்க அதற்கு பதில் அளித்த டாப்சி, “தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார். உடனே அவரிடம், “இப்போதெல்லாம் ஸ்பெயின் அல்லது இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்கிறார்களே… என்று கோலி – […]

Continue Reading

தேடிச் சென்று தம்பதிகளை வாழ்த்திய ஓபிஎஸ்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த […]

Continue Reading

ரைசா தெரிவித்த திருமணத்தகவல்

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து சத்யராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக […]

Continue Reading

கருணாநிதியுடன் மு க அழகிரி சந்திப்பு

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த […]

Continue Reading

கோபாலபுரத்தில் கல்யாண வைபோகம்

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதி முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்களை, கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது […]

Continue Reading

மாலை சூடப்போகும் மகிழ்ச்சியில் சமந்தா – நாகசைதன்யா

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு […]

Continue Reading

ஆஹா கல்யாணம்!… தரணுக்கும், தீக்‌ஷிதாவுக்கும்

பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது. […]

Continue Reading

உலக அழகியுடன் திருமணம், சந்தோஷத்தில் நாகசைதன்யா

நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் தயாராகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு […]

Continue Reading

சமந்தாவுக்கு நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய முகூர்த்த புடவை

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அக்டோபர் 6-ந் தேதி […]

Continue Reading