மெர்சல் வழக்கு.. மனுதாரரை மெர்சலாக்கிய நீதிபதிகள்!

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகக் காட்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் […]

Continue Reading

தங்கர் பச்சானின் காட்டமான டுவிட்டர் பதிவு

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் […]

Continue Reading

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]

Continue Reading