ஜோதிகாவின் அடுத்த படம்..

ஜோதிகா நடித்த “நாச்சியார்” படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து, ஜோதிகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக வித்யா பாலன் நடிப்பில் வெளியான “தும்ஹரி சுளு” படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. வித்தியாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாகவும், ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading