மார்கழியில் மக்களிசை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை சென்னையில்

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விசிக துணை பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் […]

Continue Reading

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் […]

Continue Reading

கானா-ராப்-ராக்.. பனி இரவில் ஓர் அரசியல் இசை!

இசை வழியே அரசியலை இவ்வளவு ஆக்ரோஷமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா? என்ற வியப்பைத் தந்தது “THE CASTELESS COLLECTIVE” இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வு, சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி மைதானத்தை பனிப்பொழிவையும் கடந்து உக்கிரமாய் தகிக்க வைத்திருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, வலியை, வேண்டுகோளை அவர்களது மொழியாலேயே சொல்லும் போது கிடைக்கிற வடிவமும் அழுத்தமும் முற்றிலும் வேறுபட்டதாகவும், வலிமையானதாகவும் மாறிவிடுகிறது என்பதை அச்சரம் […]

Continue Reading