சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்..!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.    படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.    இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் […]

Continue Reading

பரியனை வாழ்த்திய பிரம்மாண்ட இயக்குனர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’. கிராம வாழ்க்கையை, ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தினை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பெரும் நட்சத்திரங்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் வாழ்த்துக்களை பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படும் […]

Continue Reading

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேரும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

Continue Reading

தனியிசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்  தின் நீலம் பண்பாட்டுமையம், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ,ரூட்ஸ்  சார்பில் தனியிசைக்கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.    நிகழ்வில் தனியிசைப்பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.  தமிழகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் ஹிப்பாப், ராப், கானா, நாட்டுப்புறப்பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித்  கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை முதலில் அறிமுகப்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு பல தனியிசைக்கலைஞர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாடுவதற்க்கு வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வாய்ப்புக்கேட்கிற எல்லோருக்கும் ஒரு மேடையை […]

Continue Reading

அம்பேத்கரின் தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வேன் – இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கமான பேச்சு!

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே.,கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்… “ஒரு […]

Continue Reading

இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்த ராகுல் காந்தி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தனது அடுத்த படத்திற்கான முயற்சிகளில் இருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்தியில் அமீர் கானுடன் இணைய இருப்பதாகவும், இளைய தளபதி விஜயுடன் கைகோர்க்க இருப்பதாகவும் செய்திகள் உலவிக் கொண்டிருக்கும் நேரத்தில், இயக்குநர் பா.இரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பை நடத்தி இருக்கிறார். இந்த திடீர் சந்திப்பை குறித்து பா.இரஞ்சித் இதுவரை எதுவும் பேசாத நிலையில், ராகுல் காந்தி ரஞ்சித்துடன் இருக்கிற புகைப்படத்தை டுவிட்டரில் […]

Continue Reading