போராடவே கூடாதென்று ரஜினி சார் சொல்லவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்!!

இயக்குநர் பா.இரஞ்சித் சினிமா இயக்குநராக மட்டுமல்லாமல் அம்பேத்கரிய சிந்தனையாளராகவும், தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த சமூகம் தாங்கி நிற்கிற சாதிய அடையாளங்களை உடைத்தெறிந்து, மனித மாண்பினை மீட்டெடுக்கிற கொள்கையினைக் கையிலெடுத்துக் கொண்டு களமாடி வருகிறார். இன்றைய சமூகத்தின் அரசியல் சிக்கல்களை தெளிந்த பார்வையுடன் அணுகும் வெகுசில கலைஞர்களில் பா.ரஞ்சித் மிகவும் முக்கியமானவர், தவிர்க்க முடியாதவர். தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவிலும் தனது கருத்தியலை நிரப்பி, சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாக சரியாக பயன்படுத்தும் நம்பிக்கைக்குரிய இயக்குநர். […]

Continue Reading

டெல்லிக்கு செல்கிறார் ரஜினிகாந்த்!!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” திரைப்படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பிறகு ரஜினி கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரஜினியோடு விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிப்பதாகவும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானது. இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் […]

Continue Reading

காலாவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரம்மாண்ட திரைப்படம்!!

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் “காலா”. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தினை தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்ஸ்” தயாரித்திருக்கிறது, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல், அருள்தாஸ், சாக்‌ஷி அகர்வால், மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதலில் இப்படம், முதலில் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. […]

Continue Reading

ரம்ஜான் அன்று ரசிகர்களை சந்திக்க வரும் ரஜினி!!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் “காலா” திரைப்படம் தான் இப்போதைய சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக். முதலில் மார்ச் மாதத்தில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக தள்ளிப்போடப் பட்டது. அதன்படி, ஜூன் 7 -ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே “காலா” இசைவெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், படத்தை ரம்ஜானுக்கே வெளியிட்டுக் கொள்ளலாம் என தயாரிப்பு […]

Continue Reading

ரஞ்சித் வெறும் இயக்குநராக மட்டுமே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார் – ரஜினிகாந்த் புகழாரம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது. “காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது. இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு […]

Continue Reading

“ஒத்தத் தல ராவணா.. பத்துத் தல ஆவுடா!!” – “காலா” பாடல்கள் ஒரு பார்வை!!

வழக்கமான ரஜினி படங்களின் வரிசையில் நிற்காமல் “கபாலி” படத்தின் பாடல்களை தனித்துவத்தோடு எடுத்துச் சென்றதில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பெரும்பங்கு உண்டு. “நெருப்புடா நெருங்குடா”, “மாயநதி இங்கே”, “வீரத் துரந்தரா” என அத்தனை முத்துக்களும் ரஜினி ரசிகர்களுக்கான வேறு மாதிரியான “ட்ரீட்மெண்ட்”. அந்த வகையில் அதே கூட்டணியின் “காலா” திரைப்படத்தின் பாடல்களும் வேரொறு தளத்தில் நின்று ஓங்கி ஒலிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் எப்போதுமே இசையின் வாயிலாக மாயம் செய்யக் கூடிய ஒரு வித்தகன். அப்படியொரு […]

Continue Reading