நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை சுகன்யா

தமிழ் பட உலகில் ‘பிசி’ நடிகையாக இருந்தவர் சுகன்யா. தற்போது நடிப்புக்கு இடைவெளிவிட்டது ஏன்? என்று கேட்ட போது, “நான் சிறந்த நாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். முதல் படத்தில் நான், நெப்போலியன் உள்பட 8 பேர் புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் எனக்கு கிடைத்தது. பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உள்பட பல படங்கள் எனக்கு பெயர் சொல்லும் படங்களாக […]

Continue Reading

நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு […]

Continue Reading

நமக்கு விரோதிகள் சமூகத்திற்கும் விரோதிகள் தான் : கமல்

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி தனிக் கட்சி தொடங்கி அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார். இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார். கொடி, சின்னத்தையும் வெளியிடுகிறார். தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார். அதன்பிறகு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை […]

Continue Reading

கட்சி அறிவிப்பிற்கு தேதி குறித்த கமல்!

கமல்ஹாசனின் அரசியல் கட்சி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான […]

Continue Reading

ஆண்டவர் சொல்லிட்டாரு…

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். இதனால் இன்று காலையிலேயே மண்டபத்திற்கு வந்து குவிந்திருந்த ஏராளமான ரசிகர்கள், ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மண்டபத்திற்குள் சென்ற ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பேசிய போது, “கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். […]

Continue Reading

தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன. அடுத்த வருடத்தில் […]

Continue Reading

டைம் பாஸூக்காக அரசியலுக்கு வரக்கூடாது : ரோஜா

திருப்பதியில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் பேசினார். அப்போது, “எம்ஜிஆர்., ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும். விஷால் அரசியலுக்கு வரலாம். ஆனால் டைம் பாஸ் செய்வதற்காக விஷால் அரசியலுக்கு வரக்கூடாது. திருப்பதி கோவிலில் விஐபி தரிசனத்தில் முறைகேடுகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டிய விஜிலன்ஸ் அதிகாரிகள் என்னை […]

Continue Reading

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

Continue Reading

கமலுடன் கூட்டணி குறித்து திருமா

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் தான் தற்போதைய ஹாட் டாபிக். நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கமல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டு அங்கு கொட்டப்படும் கழிவுகளைக் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். கமலின் இந்த நடவடிக்கை குறித்து பல கட்சிகளின் தலைவர்களும் கருத்து கூறிவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். சேலத்தில் பத்திரிக்கையளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியது, […]

Continue Reading

பிறந்த நாளில் பிறக்கும் கமலின் புதிய கட்சி?

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதலும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்து வந்த கமல்ஹாசனும், “அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்.” என்றார். அதனைத் […]

Continue Reading