தனுஷ் தயாரிப்பில் ஹீரோவான இன்னொரு காமெடியன்!
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் “கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்”. நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் தனுஷின் “வுண்டர்பார் பிலிம்ஸ்” நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில், விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த தீனா கதாநயகனாக நடிக்கவிருக்கிறார். தீனா ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் “பவர் பாண்டி” படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். […]
Continue Reading