விபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி

ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஜசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜசோதாபெனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரா மாவட்டத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு குஜராத்திற்கு […]

Continue Reading

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நடுத்த வர்கத்தினருக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்ததாக மக்கள் கருதுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த […]

Continue Reading

தீவுகளையெல்லாம் சிங்கப்பூராக மாற்றும் திட்டத்துடன் மோடி

குஜராத் சட்டசபைக்கு வருகிற 9,14-ந் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்றும் இன்றும் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நேற்று நர்மதா நதிக் கரையில் அமோத் சர்க்கரை ஆலை அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசை […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத்தில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத்தில் ஜஸ்தான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘‘டீ விற்ற ஒருவர் நாட்டின் பிரதமர் ஆனதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் […]

Continue Reading

10 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றார். அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் லீ கெசி யாங் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் 69-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசியான் நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆசியாவில் 10 நாடுகள் உள்ளன. மோடியின் இந்த அழைப்பை 10 நாட்டு தலைவர்களும் […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கருத்துக்கணிப்பின் முடிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர். இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர். […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் முன்னோடியாக தினத்தந்தி : பிரதமர் மோடி

இன்று தினத்தந்தி நாளிதழின் பவள விழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ‘அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தி 75-வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தமிழில் பேசி மோடி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிய முறையில் செய்திகளை […]

Continue Reading

பிரதமர் மோடியின் லட்சியம்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் […]

Continue Reading

கட்டாய ஆதார் குறித்து சுப்ரமணிய சாமி காட்டம்

அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளின் மீது வரும் நவம்பர் மாதத்தில் இருந்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக., எம்.பி. சுப்ரமணிய சாமி கட்டாய ஆதார் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு மீரட்டில் கோவில்

பிரதமர் மோடியின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்பவர் கட்டுகிறார். இவர், உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தில் என்ஜினியராக பணியாற்றி கடந்த 29-ந்தேதிதான் ஓய்வு பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவரை மிகவும் கவர்ந்தது. மேலும் மோடி கொண்டு […]

Continue Reading