புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் தீவிரம்!!

அதிகபடியான டிஜிட்டல் க்யூப் கட்டணம், ஆன்லைன் புக்கிங் கட்டணம் உட்பட பல பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய திரப்படங்கள் வெளியீட்டு நிறுத்தம், அனைத்து பட வேலைகள் நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் டிஜிட்டல் க்யூப் கட்டணம் சம்பந்தமாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை […]

Continue Reading

காண்டான தயாரிப்பாளர் சங்கம்.. சிக்கலில் சிம்பு, வடிவேலு, திரிஷா..

சமீபத்தில் “அண்ணாதுரை” பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞான வேல் ராஜா, “தயாரிப்பாளர் சங்கத்துக்கு 3 புகார்கள் வந்துள்ளன, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய அந்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பூடகமாக தெரிவித்திருந்தார். அனைவரும் அப்போதே அது சிம்பு, வடிவேலு தான் என்று யூகிக்க ஆரம்பித்தனர். இப்போது அந்த யூகம் சரிதான் என்று நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் சிம்பு, வடிவேலுவோடு நடிகை த்ரிஷாவையும் கட்டம் கட்டியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். கோடிக்கணக்கில் […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் கலைத்த விஷால்…

மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷால் தனது ஆதரவை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். விஷால் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது, ”மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் காக்கும் விஷால்.. காரணம் என்ன?

  மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை  நீக்க வேண்டிய அவசியமில்லை […]

Continue Reading

ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறார்கள் தியேட்டர்க்காரர்கள்?

எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த திரையரங்கம் இருந்தது. தும்பை நிறத்தில் அகலமாய் விரிந்திருந்தத் திரைக்கு அருகில் குளிர்ந்த மணலோடும், கொஞ்சம் பின்னால் மரத்தாலான நீண்ட பெஞ்சுகளோடும், அதற்கும் பின்னால் சிவப்பு வண்ணம் பூசிய நாற்காலிகளோடும், தகரத் தட்டுகளால் ஆன கூரையோடும் ஆன அதன் அமைப்பு இப்போது நினைக்கையிலும் நெஞ்சினில் ஈரத்தோடு அப்படியே தான் இருக்கிறது. அங்கே தான் சினிமா அறிமுகமானது. அங்கேதான் ஆதர்ஷ நாயகர்கள் அறிமுகமானார்கள். மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ என்று அளவாகவே […]

Continue Reading