ரெட் கார்டு வாங்காமல் தப்புவாரா வடிவேல்?

வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது. சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் […]

Continue Reading

உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் கோரிக்கைகள் : விக்ரமன்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி உள்பட சங்கத்தினர் பலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் உள்பட சங்கத்தினர் சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த விக்ரமன், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் […]

Continue Reading

திரையுலக நலனுக்காக பேரணி !… மக்கள் நலனுக்காக ?….

ஒரு பக்கம் ஸ்டெர்லைட்.. ஒரு பக்கம் காவேரி.. என தமிழ்நாடே தகித்துக் கொண்டிருக்க, தமிழ்த் திரையுலகமோ 4-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்லவிருப்பதாய் அறிவித்திருக்கிறது. உண்மையிலேயே சினிமா இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட “மோனோபோலி” சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து விட்டது “கியூப்”. அவர்களை மீறி எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்கிற சூழல். அதனால் தான் வழக்கமாக விஷாலுடன் முட்டிக்கொண்டு நிற்கும் தயாரிப்பாளர்கள் கூட இந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக […]

Continue Reading

ரஜினி, கமலுக்கு எதிரான தயாரிப்பாளர்

ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.   சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு […]

Continue Reading

மறுபடியும் ஸ்டிரைக்… இந்த முறையாவது மாற்றத்தை தருமா?

பைனான்ஸ், ஆன்லைன் டிக்கெட் விற்பனை, ரிலீஸ் என சினிமாவைப் பொறுத்தவரை எதுவுமே முறைப்படுத்தப்படாமல் தான் இருக்கிறது இன்னும். வட்டிக்கு வாங்காமல் படம் எடுப்பவர்கள் கூட, ரிலீசுக்கு திக்குமுக்காடித் தான் போகிறார்கள் ஒவ்வொரு முறையும். காரணம் வினியோகஸ்தர்கள், அவர்களைக் கட்டுப்படுத்தும் “நிழல் உலகம்”. ஒரு படத்தை செலவு செய்து எடுத்து முடிப்பதை விட, சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வது தான் இப்போது தயாரிப்பாளர்கள் முன்னிருக்கும் மாபெரும் சவால். இந்த தொல்லைகளை எல்லாம் கண்டு தான், பழம்பெரும் சினிமா தயாரிப்பு […]

Continue Reading

விஷாலுக்கு சவால் விட்ட சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விசயங்கள் தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. […]

Continue Reading

சேரனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

விஷால் எப்போது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தாரோ அப்போதிருந்தே அவரைச் சுற்றி வெறும் பிரச்சனைகளே அதிகம் இருந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலிலோ அடிதடி அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியது. தற்போது ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்ததும் உள்ளிருப்பு போராட்டம் என மற்ற தயாரிப்பாளர்கள் இறங்க மீண்டும் பிரச்சனை சூடு பிடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சேரன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு

கேளிக்கை வரி 10 சதவீதம் அமல்படுத்தியதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழலில், சினிமா கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.150, குறைந்தபட்சம் ரூ.15 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.120-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.150-ஆகவும், ரூ.95-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80-ஆகவும், ரூ.85-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30-ஆகவும், ரூ.10-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் […]

Continue Reading

பெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை

‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் […]

Continue Reading