எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல – கருப்பி உடைக்கும் உண்மை!

ஒரு பாடல் வெளியான தினத்திலிருந்து மண்டைக்குள்ளும், மனதிற்குள்ளும் கிடந்து அனத்திக் கொண்டே இருந்தால் அதை என்னவென்று சொல்வது?. அது ஒரு கொண்டாட்டமாக இருந்திருந்தால் அனுபவிக்கலாம், குதூகலிக்கலாம். அது ஒரு அழுகுரலாக அல்லவா கேட்கிறது! ஒப்பாரியாக அல்லவா ஒலிக்கிறது! பெற்ற பிள்ளையின் இறப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் வலியாக, காதலியின் இழப்பினைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் கதறலாக இதயத்தின் அடி நரம்பை அசைக்கும் இந்தப் பாடலை எவ்வாறு சாதாரணமாகக் கடந்து போக முடியும்? […]

Continue Reading

பரியேறும் பெருமாளையும், மாரி செல்வராஜையும் கொண்டாடிய இயக்குநர் ராம்!!

  இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட […]

Continue Reading

சவரக்கத்தி – விமர்சனம்!

ஒரு பக்கம் மிஷ்கின், இன்னொரு பக்கம் ராம் இருவரில் யாரை பார்ப்பது? இருவரையும் தாண்டி குண்டா, குட்டையா மிஷ்கின் அடியாளாக வரும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, மன்னிக்கவும்) அவரைப் பார்ப்பதா? அட இவர்களை விடுங்கள், பூர்ணா.. “எய்யா சாமி, எங்கய்யா இருக்க?” என்று தம்பியிடம் போன் பேசுவதும், “அத்தான்” என்று ராமிடம் குழைவதுமாய் ஒரு நிறைமாத கர்ப்பிணியாக வருகிறாரே அவரைப் பார்ப்பதா?. இப்படி ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்குமளவிற்கு, அப்படியென்ன பிரமாதமான கதை இது? வாயாலேயே […]

Continue Reading