புதிய கவர்னராக பன்வாரிலால் நியமனம்

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பை ஏற்றார். கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அவர் கூடுதல் கவர்னராக பதவி ஏற்றார். ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஒரு ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை […]

Continue Reading

பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர், “மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி, இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக விளங்கி ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துபவர் என்றும், அந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பதவி காலம் சிறப்பாக அமைய […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மோடி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் […]

Continue Reading

ஆதரவு திரட்ட வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

14-வது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை கடந்த 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரது முன்னிலையில் தாக்கல் செய்தார். தனக்கு ஆதரவு அளித்த கட்சி தலைவர்களையும், அந்தந்த கட்சிகளின் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயாக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் அறிவிக்கப்பட்டதும் அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீராகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மத்திய […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், பாஜக அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும், தங்களுக்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க.வில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய 3 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட அனைவரிடமும் பேச்சு நடத்தினார்கள். மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. […]

Continue Reading