ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்ட ரோம்-காம் வலைத் தொடரான,  கவின்-ரெபா மோனிகா ஜான் நடித்த,  “ஆகாஷ் வாணி” தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் பொழுதுபோக்கு நிறைந்த, ஒரு  ஜாலியான  காதல் கதை இது என்பதை சொல்வதாக அமைந்திருக்கிறது, ஆனால் இயக்குனர் எனோக் ஏபிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மகிழ்ச்சியான ஜாலி ரொமாண்டிக் பயணம் என்பதை சொல்ல  மட்டுமே ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறுகிறார். இணைய தொடர் […]

Continue Reading

தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

  ஹிப்பி’ என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷியின் அழகு தோற்றமும், எல்லைகளைக் கடந்த தன்னிச்சையான நடிப்பும் ரசிகர்களை அச்சரியத்தில் மூழ்கடித்தன. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் டிகன்கனா சூர்யவன்ஷியின் தமிழ்ப்பட அறிமுகம் குறித்து சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக ஆவலோடு காத்திருக்க, இப்போது ஹரீஷ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் வெளியாவது குறித்து அகமகிழ்ந்திருக்கின்றனர். பகட்டான அழகுப் பதுமையான டிகன்கனா ஹரீஷ் கல்யாணுடன் வெண்திரையைப் பகிர்ந்துகொண் டிரைலர் […]

Continue Reading

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து ஹரீஷ் கல்யாண்..

    பனி படரத்தொடங்கியிருக்கும் இந்த இதமான தட்ப வெட்ப நிலையில் நெஞ்சுக்கு நெருக்கமாக அமையக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் படத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எது அழகாகவும் அற்புதமான அனுபவமாகவும் இருக்க முடியும்? ஆம்… எதிர்வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாக அனைத்து தரப்பையும் மகிழ்விக்கவிருக்கிறது. இது குறித்து படக்குழு முழுவதும் அதிகபட்ச உற்சாகத்தில் திளைக்க, நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா […]

Continue Reading

‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்!

  நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, “இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் […]

Continue Reading

களமிறங்கிய நிதின் சத்யாவுடன் கைகோர்த்த ஜெய்

`சென்னை 600028′ படத்தில் நண்பர்களாக வரும் ஜெய், நிதின் சத்யா ஒரு படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர். பல படங்களில் நடிகராக பார்க்கப்பட்ட நிதின் சத்யா, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வரும் அந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை நிதின் சத்யாவின் […]

Continue Reading