முன்னோடி – விமர்சனம்

வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் நாயகன் ஹரிஷ், உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றுவதால், அவருடனேயே இருந்து அடியாள் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவியான நாயகி யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழுகிறார். இதற்கிடையில், தாதா அர்ஜுனாவின் மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும் பிரிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷ், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். இதனால், தாதாவை விட்டும் விலகும் […]

Continue Reading

போங்கு – விமர்சனம்

சென்னையில் தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழில் செய்து வருகிறார் நட்டி. இவருக்கு மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா வைத்திருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்கிறார் நட்டி. இறுதியில் நட்டி 10 கார்களை திருடினாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் மாட்டினாரா? கார் திருட்டு தொழிலில் நட்டி ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி […]

Continue Reading

இணையதளம் – விமர்சனம்

ஒரு இணையதளத்தின் நேரலை வீடியோவில் டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அந்த இணையதளத்தில் வீடியோவை நேரலையில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூட கூட அவர் மரண கட்டத்தை நெருங்குகிறார். இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவின் (Cyber Crime) பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபடுகிறார்கள். அப்போது, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார். இதையடுத்து, இந்த […]

Continue Reading

சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மதன் பாப் பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த கட்சியில் தமிழக தலைமைப் பொறுப்புக்கு சூரி பொறுப்பேற்கிறார். மறுபுறத்தில் வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பன் யோகி பாபு, சூரியுடன் அந்த கட்சியில் இணைகின்றனர். பின்னர் போஸ்டர் அடிக்கும் பிரச்சனை ஒன்றில் சூரிக்கும், […]

Continue Reading

இலை – விமர்சனம்

பெண்களை படிக்க வைக்க விரும்பாத திருநெல்லி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகி சுவாதி நாராயணன். ஆனால், சுவாதி நாராயணனுக்கோ நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ விருப்பமில்லை. இந்நிலையில், சுவாதி நாராயணனுக்கு கடைசி தேர்வு எழுதும் நேரத்தில் பல தடைகள் வருகிறது. தடைகள் அனைத்தையும் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை. இலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி […]

Continue Reading

ப.பாண்டி – விமர்சனம்

பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும். சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு […]

Continue Reading

கவண் – விமர்சனம்

விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகின்றனர். படிப்பை முடிக்கும் தருவாயில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார். அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து […]

Continue Reading

புரூஸ் லீ – விமர்சனம்

ஜெமினி கணேசன் என்கிற ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்தாங்கோழி. இவரது பயத்தை போக்கவே சிறுவயதிலேயே ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்து விடுகிறார்கள். ஜி.வி.யின் நண்பன் பால சரவணன். ஜி.வி.பிரகாஷின் காதலி கீர்த்தியையும், பால சரவணன் காதலி என நான்கு பேரும் ஒன்றாக சுற்றி வருகிறார்கள். ஒருநாள் மெரினா பீச்சில் கிடைக்கும் கேமராவால், லோக்கல் தாதாவாக இருக்கும் ராமதாஸ் அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்வதை ஜி.வி.பிரகாஷ் படம் பிடித்து விடுகிறார். இந்த புகைப்படத்தை வைத்து தாதா ராமதாசை […]

Continue Reading

யாக்கை – விமர்சனம்

நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது. சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள […]

Continue Reading