தானா சேர்ந்த கூட்டணி!

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]

Continue Reading

”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்!

”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையுமே “ஐ ஆம் வெயிட்டிங்” சொல்ல வைத்திருக்கும் படம். தீபாவளி ரிலீசிற்கு வெறித்தனமாய் தயாராகி இருக்கும் மெர்சலைப் பார்க்கத் தூண்டுகிற முக்கியமான காரணங்கள் இதோ… முதல் காரணம், பைரவா வரையிலும் ”இளைய தளபதியாக” இருந்த விஜய் மெர்சலின் மூலமாக ”தளபதியாக” ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். மேலும் முதல் முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், எண்பதுகளின் காலகட்டத்தில் இருப்பது போல் வரும் மதுரை மண்ணின் மைந்தன் கேரக்டர் விஜயின் கேரியரில் […]

Continue Reading

ஸ்பைடர் – விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஸ்பைடர்’ மகேஷ் பாபுவின் நேரடித் தமிழ்ப்படமான இதில் அவர் உளவுத்துறைக்காக பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, சமூக விரோதிகளைக் கண்டறிந்து கூறும் வேலை செய்கிறார். மிகவும் திறமைசாலியாக இருக்கும் அவர், அரசுக்குத் தெரியாமல், தனிப்பட்ட முறையில் சாப்ட்வேர் ஒன்றைத் தயார் செய்து, அதன் மூலம் அப்பாவி மக்கள் யாராவது கடத்தல்காரர்கள், கொலைகாரர்களின் […]

Continue Reading

புதுமாப்பிள்ளை போல உணர்வதாக சொன்ன ஏ ஆர் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஸ்பைடர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதாலும், மகேஷ் பாபு நேரடியாக தமிழில் நடிக்கும் படம் என்பதாலும் இத்திரைப்படத்தின் […]

Continue Reading

படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பரிசு

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், `மெர்சல்’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் […]

Continue Reading