தமிழ் சினிமாவில் ஒலிக்க வரும் ஈழத்து குரல் பாடகர் ” சத்யன் இளங்கோ “

ஒரு கமர்சியல் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம். அதேபோல் ஒரு பாடலின் வெற்றிக்கு பாடகர்களின் குரலும் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான அடுத்தசாட்டை படத்தில் இருபாடல்கள் குரலுக்காகவே பெரிதாக கவனிக்கப்பட்டது. அந்தக்குரல் சத்யன் இளங்கோவின் குரல். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சத்யன் இளங்கோ அடுத்தசாட்டை படம் மூலமாக தனிப்பெரும் கவனம் பெற்ற பாடகராக உருவெடுத்துள்ளார். “கரிகாடு தானே பேரழகு” “அவன் வருவான் என இருந்தேன்” என்ற இரு பாடல்களும் சத்யன் இளங்கோ குரல் கொண்ட பாடல்கள். பிரபு திலக் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்து, அன்பழகன் இயக்கிய அடுத்தசாட்டை படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து இருந்தார். ஒரு பாடகரின் குரலுக்கு இசை அமைப்பாளர் மகுடம் சூட்டும் போது அப்பாடகர் மேல் ஒட்டுமொத்த வெளிச்சமும் பதிவாகும். அப்படி ஒரு வெளிச்சம் கிடைத்த சத்யன் இளங்கோ ஒரு பாடகராக மட்டும் அல்லாமல் ஒரு நடிகராகவும் பரிணாமம் பெற்றவர். 2012-ல் ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் திரைப்படமான “இனியவளே காத்திருப்பேன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்படத்தை அவரது தந்தையான ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். Ravi & Jane, Thousand sons என்ற  இரண்டு ஆஸ்திரேலியா, குறும்படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நம் நெஞ்சின் அடியாழம் வரை தன் குரலால் இறங்கும் ஈழத்து சத்யன் இளங்கோ இனி தமிழ்சினிமாவில் பாடகராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த உயரங்களை தொட இருக்கிறார்.

Continue Reading

ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்   S.S.ராஜமௌலி இயக்கத்தில்   “ஆர் ஆர் ஆர்”   தமிழ் பேசும் ராம் சரண்-என் டி ஆர்   இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”     300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.   அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் […]

Continue Reading

நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  ” பெட்டிக்கடை “ இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்   இந்த படத்தில்  அமரர் நா.முத்துகுமார் எழுதிய  […]

Continue Reading

பிப் 22ஐ குறி வைக்கும் 8 திரைப்படங்கள்.. தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி!

  பிப்ரவரி 22ஆம் தேதி பல திரைப்படங்கள் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே”, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “எல் கே ஜி”, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “90ML“, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “பெட்டிக்கடை”, ”டூ லெட்” ஆகிய ஐந்து படங்கள் பிப்ரவரி 22ஐ குறிவைத்துள்ளன. திரையரங்குகளை கைப்பற்றுவதில் இந்த படங்களுக்குள் தற்போது போட்டா போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த வாரம் வெள்ளியன்று […]

Continue Reading