“தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” – ஆனந்த் சங்கர்..!!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.   இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் […]

Continue Reading

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி

‘பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரின் இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு திரைப்படம் வெளியானது. இவருடைய தயாரிப்பு மற்றும் எழுத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் […]

Continue Reading

பார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் […]

Continue Reading

7 பேரும் விடுதலைக்கு தகுதியானவர்கள் : சத்யராஜ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ், வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்புகளை முடித்து விட்டு நேற்று பேரறிவாளனை பார்ப்பதற்காக ஜோலார்பேட்டைக்கு வந்தார். பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். […]

Continue Reading

படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பரிசு

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், `மெர்சல்’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து விஜயின் மெர்சல்

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் மெர்சல். அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிகட்டப் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் விநியோக உரிமையை எம்.கே.ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தின் கேரள விநியோக உரிமையை `பாகுபலி’ படத்தைக் கைப்பற்றிய குளோபல் யுனிடெட் மீடியா நிறுவனம் ரூ.7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. கேரளாவில் அதிக தொகைக்கு விலை போன […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து சங்கமித்ராவிலும் கட்டப்பா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி. […]

Continue Reading

பா ரஞ்சித் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்.” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான […]

Continue Reading

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜ் : வீடியோ இணைப்பு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார். அன்றே நடிகர் சத்யராஜின் உருவபொம்மையை கர்நாடக […]

Continue Reading