நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி’ கவுரவ டாக்டர் ‘ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான […]

Continue Reading

பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும்.பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. பெருந்தொற்றின் […]

Continue Reading

“Corona kumar”திரைபடத்தில் சிம்பு!!!

ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், தற்போது ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது. முதலில் இப்படத்தில் சந்தானம் […]

Continue Reading

பாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பை பிடித்த வீடியோ மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் சிம்பு கழுத்தில் பாம்பை சுற்றி பிடித்து இருப்பது போன்று போஸ் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் மரத்தில் தொங்கும் ஒரு பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ […]

Continue Reading

கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி […]

Continue Reading

பரதம் கற்கும் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பது நடிகர் விஜய்யோட ரீல் தங்கை […]

Continue Reading

மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார். சில வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் […]

Continue Reading

சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை?

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதன்பிறகு கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்தநிலையில் சிம்பு இன்னொரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, […]

Continue Reading

எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து.- சிம்பு அறிக்கை

எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து.- சிம்பு அறிக்கை பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து […]

Continue Reading

ரீமேக் படத்தில் பார்த்திபன், சிம்பு?

பிரித்விராஜ், பிஜுமேனன் நடித்து மலையாளத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ பிரித்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், பிஜூமேனன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்து இருந்தனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் வாங்கி இருக்கிறார். இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி நடிகர் ஜான் அபிரகாம் பெற்றுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சச்சி சமீபத்தில் மாரடைப்பால் […]

Continue Reading