விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நயன்தாரா

பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த […]

Continue Reading

சிவகார்த்திகேயனின் புது கெட்-அப்

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 24 ஏ எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் கலை இயக்குநர் முத்துராஜ் சிவகார்த்திகேயன் நடிப்பில் […]

Continue Reading

மீண்டும் பிரம்மாண்டம் காட்டப்போகும் சிவகார்த்திகேயன்!

காமெடி, கலாட்டா என வலம் வந்த சிவகார்த்திகேயன், “வேலைக்காரன்” மூலமாக செம்ம சீரியசான பெர்ஃபார்மராக தன்னை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுவிட்டார். அதிலிருந்து தன்னை கொஞ்சம் மாற்றிக்கொண்டு பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, மீண்டும் “வேலைக்காரன்” பாணியிலேயே பிரம்மாண்ட கூட்டணியோடு இணைகிறார். “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கத்தில் “விஞ்ஞானியாக” சிவகார்த்திகேயன் நடிக்கிறார். “24ஏ.எம்.ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். […]

Continue Reading

நண்பனுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது அவதாரம்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் “சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் […]

Continue Reading

நம்பிக்கை நாயகன் எஸ்.கே!!

சினிமா ஒரு மாய உலகம். இங்கு வெற்றி தோல்வியை கணிப்பதென்பது காலங்காலமாக இதற்குள் கோட்டை கட்டி வாழும் ஜாம்பாவன்களுக்கே சிம்ம சொப்பனம்தான். கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிறைந்திருக்கும் மனிதத் திரளில் பாதி, இந்தக் கணக்குகளுடன் தான் தங்கள் எதிர்காலத்தை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இன்றும். எதுவுமே இல்லாமல் வந்து சிகரத்தில் இருப்பவர்களையும், எல்லாம் இருந்தவர்களாக இருந்தும் எதையுமே சாதிக்க முடியாமல் போனவர்களையும், இந்த இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு சிக்கி சீரழிந்தவர்களையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் […]

Continue Reading

நடிகர்களின் அரசியல் வருகை.. சிவகார்த்திகேயன் கருத்து!

தமிழ் சினிமாவின் “யூத் ஐகான்” சிவகார்த்திகேயன். தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டமும், அதை பயன்படுத்தி முன்னேறும் அசாத்திய உழைப்புமே சிவாவை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும் வேலைக்காரன் படத்தில் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக பேசியிருப்பார். புத்தாண்டையொட்டி தனியார் தொலைக்காட்சியொன்றில் அளித்த பேட்டியில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அவறில் சில, “சினிமாவில் இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். எல்லோருமே மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். யூ-டியூப், டிவி, சினிமா எல்லாமே இப்போது ஒன்றாகிவிட்டது. அதனால் […]

Continue Reading