பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். மதுரையில் பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய கமல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தனது கட்சி பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், அப்பணிகளை முடித்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து […]

Continue Reading

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8.15 மணி நிலவரப்படி பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. […]

Continue Reading

பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர், “மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி, இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக விளங்கி ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துபவர் என்றும், அந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பதவி காலம் சிறப்பாக அமைய […]

Continue Reading