இறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்!!

65-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் எல்லோரையையும் நெகிழச் செய்யும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதன் இந்தியில் வேளியான திரைப்படம் “மாம்”. இதில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அனைத்து தரப்பினராலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இப்போது அந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பிற்கு “சிறந்த நடிகை”க்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அவர் இப்போது உயிருடன் இல்லை என்பது […]

Continue Reading

ஸ்ரீதேவி பற்றி பேசுங்கள்.. அதே நேரம் ஆராயியையும் கவனியுங்கள்.. பிரசன்னாவின் வேண்டுகோள்!

விழுப்புரத்தில் ஆராயி என்பவர் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்டான். மேலும், அவருடைய 14 வயது மகள் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து எந்த விதமான செய்தியும் வெளிவந்து விடாத வண்ணம் கவனமாக தவிரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக நடிகர் பிரசன்னா தனது குரலை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து உள்ள அவர், “இந்த சம்பவம் […]

Continue Reading

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கமல்!

ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதற்காக அவர் இன்று (26.2.2018) மாலை மும்பைக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து 26 படங்களில் நடித்துள்ளார்கள். ரஜினி, கமல் இவர்களைத் தவிர தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்கள் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. 

Continue Reading

மும்பை விரைகிறார் ரஜினி!

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடைபெற்ற திருமணா நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எப்படியும் இன்று மாலைக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்ம்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல பிரபலங்களும் மும்பை விரைந்து கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading