காவிரி தொடர்பான வழக்கில் 9ம் தேதி உரிய உத்தரவு – சுப்ரீம் கோர்ட்

  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், தமிழகத்தின் என்னதான் நடக்கிறது.    ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது. மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். […]

Continue Reading

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு மனு தாக்கல்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மெளனம் காத்த மத்திய அரசு […]

Continue Reading

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தமிழக அரசு

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், 6 வார காலத்துக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த 6 வார காலக்கெடு நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில் காவிரி நீரை பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் அழைத்து பேசி, காவிரி விவகாரத்தில் எழுத்துப்பூர்வ […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் கருத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

கடந்த 2014 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் இது குறித்து மேலும் சில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் […]

Continue Reading

கட்டாய ஆதார் குறித்து சுப்ரமணிய சாமி காட்டம்

அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளின் மீது வரும் நவம்பர் மாதத்தில் இருந்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக., எம்.பி. சுப்ரமணிய சாமி கட்டாய ஆதார் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது […]

Continue Reading

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7-ம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது. கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]

Continue Reading

நீதிபதி கர்ணனுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது: மேற்கு வங்க டிஜிபி

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார். இந்நிலையில், […]

Continue Reading

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் அரங்கேற்றிய இந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. இதில் தொடர்புடைய ராம்சிங் என்பவர் டெல்லி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி ஐகோர்ட்டும் […]

Continue Reading