ஐபிஎல் அறிமுக விழாவில் ஆட வரும் தேவி தம்பதி

11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐபிஎல் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தினமும் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஐபிஎல்லில் இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் […]

Continue Reading

தீவிர வொர்க் அவுட்டில் நடிகர், நடிகைகள்

தமிழ் சினிமாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் முன்னணி நடிகர்-நடிகைகள் இந்த வேலை நிறுத்தம் குறித்து கவலைப்படாமல் கிடைத்த விடுமுறையை அனுபவிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டனர். சில வளரும் நடிகர்-நடிகைகள் இந்த விடுமுறையிலேயே தங்களது உடலை கட்டுக்கோப்புக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். தினமும் ஜிம்முக்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அப்படி ஜிம்மில் தீவிரமாக ‘வொர்க் அவுட்’ செய்யும் படங்களையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிந்து வருகிறார்கள். முதலில் […]

Continue Reading

பிரம்மாண்ட மேடையில் நடனமாட இருக்கும் தமன்னா!!

11-வது ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் “ஐபிஎல் 2018 அறிமுக விழா”வில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு […]

Continue Reading

எனது சினிமா வாழ்வின் சிறந்த படம் இது – தமன்னா!!

தமிழ் சினிமாவில் இயல்பான கதையோட்டமுள்ள படங்களின் மூலம் கவனம் ஈர்ப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி. “தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” என அவரது படங்கள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலோடும், உணர்வுகளோடும் வெளிவந்து வெற்றி பெற்றவை. தற்போது, அவரது இயக்கத்தில் “ரெட் ஜெயின்ட் மூவிஸ்” தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கண்ணே கலைமானே”. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

தமன்னாவின் மாற்றத்திற்கு காரணம்

யோகா பயிற்சி மனதை மட்டுமல்ல, உடலை கட்டுக் கோப்பாக வைக்கிறது. எனவே பெரும்பாலான நடிகர், நடிகைகள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். அனுஷ்கா யோகா ஆசிரியையாக இருந்து நடிகையானவர். இவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு செல்லும்போது, யோகா பயிற்சி பற்றிய ஆலோசனைகளை நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருகிறார். இவரை தொடர்ந்து பல நடிகைகள் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பள்ளியில், யோகா மாஸ்டர் ருஹீ என்பவரிடம் தீவிர யோகா […]

Continue Reading

மனம் திறந்து பேசிய தமன்னா!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் முன்னணி ஹீரோயினாக நிலைத்து நிற்கும் நடிகைகளில் தமன்னாவிற்கு நிச்சயம் இடமுண்டு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “ஸ்கெட்ச்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் சினிமா வாழ்க்கையில் அவரின் வெற்றி-தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா. அவர் அளித்த பேட்டி வருமாறு :- “சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜமானது. ஆனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். சினிமாவுக்கு அறிமுகமான சமயத்தில் படங்கள் தோற்றால் அதற்கு நான்தான் காரணம் […]

Continue Reading

கல்தா கொடுத்த நடிகர்.. கலக்கத்தில் கௌதம்!

கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது வர வர அதிசயமான ஒன்றாகிவிட்டது. அவரது “எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” படங்களே எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களையுமே “எஸ்கேப் ஆர்டிஸ்ட்” மதனோடு இணைந்து தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து “பொன் ஒன்று கண்டேன்” என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு’ […]

Continue Reading