அரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் […]

Continue Reading

“நீட்” என்னும் அரக்கன் – யார் காப்பார் நம் குழந்தைகளை?!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான். ஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் […]

Continue Reading

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தமிழக அரசு

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், 6 வார காலத்துக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த 6 வார காலக்கெடு நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில் காவிரி நீரை பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் அழைத்து பேசி, காவிரி விவகாரத்தில் எழுத்துப்பூர்வ […]

Continue Reading

தை மாதம் ஜெ.,யின் உண்மை ஆட்சி : தினகரன்

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சாமி கும்பிட வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. தற்போது காட்டாட்சி நடக்கிறது. கந்துவட்டிக்கு எதிராக ஜெயலலிதா வலுவான சட்டம் கொண்டு வந்தார். தற்போது இருப்பவர்கள் பதவி சுகத்திற்காக ஆட்சியில் உள்ளனர். விரைவில் அவர்கள் வீட்டுக்கு செல்லும் காலம் வரும். வரும் தை மாதத்திற்குள் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் […]

Continue Reading

நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் […]

Continue Reading