புது வரலாறே.. புற நானூறே!! – உமாதேவி சிறப்புப் பேட்டி!!

தமிழ் சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் தரமான பாடல் வரிகளைத் தருகிற பாடலாசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மொழி கலப்பில்லாமல், இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகள் இல்லாமல் பாடல்கள் எழுதுபவர்கள் அதிலும் சொற்பம் தான். அந்த சொற்பமானவர்களில் பாடலாசிரியை உமாதேவி மிகவும் முக்கியமானவர். அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான இவர், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” படத்தில் எழுதிய “நீ நான் நாம் வாழவே” பாடலின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து “கபாலி”, “மகளிர் […]

Continue Reading

மறக்கக்கூடாத வரலாற்று சாதனை – பாடலாசிரியை உமாதேவி!!

மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடெங்கிலும் உள்ள தலித் மக்களின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டங்களில், வன்முறை ஏற்பட்டு 12 தலித்துகளும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து தலித் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. […]

Continue Reading

பா.ரஞ்சித் தொடங்கி வைத்த “பற”!

‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.  இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் […]

Continue Reading

உடைந்தழுத உமாதேவி!

கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப் பூர்வமானதாக்கியிருப்பார். “அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க […]

Continue Reading