உ.பி முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காய்ரானா எம்.பி. தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியைத் தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கோபமாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எகிலாம் பிரகாஷ் முதல்-மந்திரி ஆதித்யநாத்தை கண்டித்து இந்தியில் கவிதை எழுதி […]

Continue Reading

பனாரஸ் பல்கலை தேர்வில் சாணக்கியரின் ஜி எஸ் டி

உத்தரப்பிரதேசம் மாநிலம் பணாரஸ் நகரில் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு எம்.ஏ படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பண்டைய மற்றும் மத்திய இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் பார்வை’ என்ற பாடத்திற்கான தேர்வில், ‘சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி குறித்து கட்டுரை எழுதுக’ என்று ஒரு கேள்வி இருந்துள்ளது. இதேபோல, ‘உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த இந்தியர் மனு – விவாதிக்க’ என்று மற்றொரு கேள்வி இருந்துள்ளது. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் […]

Continue Reading

முடிவுக்கு வந்த ஆருஷி கொலை வழக்கு

கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கவுதம புத்தநகர் மாவட்டம் நொய்டா பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர். இவர்களது 14 வயது மகள் ஆருஷி மற்றும் வீட்டு வேலையாள், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டை உலுக்கிய […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு மீரட்டில் கோவில்

பிரதமர் மோடியின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்பவர் கட்டுகிறார். இவர், உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தில் என்ஜினியராக பணியாற்றி கடந்த 29-ந்தேதிதான் ஓய்வு பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவரை மிகவும் கவர்ந்தது. மேலும் மோடி கொண்டு […]

Continue Reading