தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான […]

Continue Reading

“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்!!!!!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக […]

Continue Reading

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய நடிகை அதிதிராவ்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதிராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் கலந்துக் கொண்டார். தற்போது ஊரடங்கு தளர்வால் துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் துக்ளக் […]

Continue Reading

வலுக்கும் எதிர்ப்புகள்- 800 படத்தில் இருந்து விலகுவாரா விஜய்சேதுபதி ?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. டாக்டர் ராமதாஸ், வைகோ, சீமான், பாரதிராஜா, சீனுராமசாமி, சேரன், […]

Continue Reading

800 படத்திற்கு அதிகரிக்கும் எதிர்ப்புகள் – திடீர் அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது […]

Continue Reading

விஜய்சேதுபதி ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கிறார் என தகவல்

முத்தையா முரளிதரன் குறித்த ‘800’ படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் தனது முடிவை நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரிரு நாளில் ஆலோசித்து தனது […]

Continue Reading

டிரைவ்-இன் தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படம் அதே நாளில் திரையரங்கிலும் வெளியாக […]

Continue Reading

அனுஷ்காவுக்கு உதவி செய்த விஜய் சேதுபதி.

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடி-யில் […]

Continue Reading

விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வெயிட்டு காட்ட இருக்கிறார் ஸ்ரீதர்

தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர்.

Continue Reading

வைரலாகும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. […]

Continue Reading