தாகூர் தோற்றத்தில் பச்சன்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘சயீரா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இதில், அவருடைய ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்த படம் வெளியாக இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிப்பதற்காக அமிதாப்பச்சன் ஐதராபாத் வந்துள்ளார். இதில், அவருடைய தோற்றம் இப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Continue Reading

அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கு படம்

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார். படம் குறித்து ரத்னவேலு பேசும் போது, “சுமார் 25 நாட்கள் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அதிபயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கினோம், அது சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படமாக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் வரை […]

Continue Reading

முதலில் தமிழ் சினிமா என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை – சுரேஷ் மேனன்

  சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம்  மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.     இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, “சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் […]

Continue Reading

இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

கருப்பன் – விமர்சனம்

ரேனிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் கருப்பன். காளைகளை அடக்குவதில் வல்லவரான விஜய்சேதுபதி, காட்டு வேலைக்கு போவது, சம்பாத்தித்த பணத்தில் தாய்மாமன் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றுவது என இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது. யாராலும் அடக்க முடியாத அந்த காளையை அடக்கினால், தனது தங்கையான நாயகி தன்யாவை […]

Continue Reading

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கும் ரம்யா நம்பீசன்

விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திரப் படத்தில் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன், “தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பிருந்தே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகு தான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன். ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப் பற்றி […]

Continue Reading

‘96’ல் இருக்கும் மூணு ஆறு?

விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி `96′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட […]

Continue Reading