‘பொன்னியின் செல்வன்’ யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் […]

Continue Reading

“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்!!!!!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக […]

Continue Reading

ரஜினி பட இயக்குனருடன் இணையும் விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் அடுத்ததாக ரஜினி பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்திவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. இதுதவிர விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில், […]

Continue Reading

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யவர்மா ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யவர்மா ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது.  இப்படம்  வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக […]

Continue Reading

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை […]

Continue Reading

பிரபல நடிகரின் மகனுடன் ஜோடி சேர்ந்த மேகா

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட […]

Continue Reading

விக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்ஸ்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது சாமி படத்தின் […]

Continue Reading

சாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாக்கி இருக்கும் இந்த […]

Continue Reading

சீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்!!

தன்னைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அடுத்தடுத்து புகார்கள் குவிந்தாலும் “துருவ நட்சத்திரம்” படத்தை வேகமாக முடித்தாக வேண்டும் என வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் “துருவ நட்சத்திரம்” படத்தை மூன்று பாகங்களாக […]

Continue Reading