ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி!

அஜித் – சிவா கூட்டணி “விஸ்வாசம்” படத்துடன் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. “வீரம்” படத்தில் ஆரம்பமான இந்த கூட்டணி “வேதாளம்”, “விவேகம்” என தொடர்ந்து தற்போது “விஸ்வாசம்” வரை நீடிக்கிறது. ஆனால் நிஜமாக சொல்ல வேண்டும் என்றால், அஜித் ரசிகர்களுக்கே இந்த கூட்டணி நீடிப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “விவேகம்” படம் வெளியான சமயத்தில் பல அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ […]

Continue Reading

அஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்

அஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் […]

Continue Reading

8 வருடத்திற்குப் பின் அஜித்

அஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது. அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் […]

Continue Reading

வயதான தோற்றத்தில் இருந்து இளமைக்கு மாறும் நடிகர்

சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் […]

Continue Reading

விஸ்வாசம் படத்தில் ‘வீரம்’ பட வில்லனுக்கு டப்பிங் பேசியவர்

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பட அதிபர்கள் போராட்டத்தால் மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஸ்டிரைக் முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போஸ் வெங்கட் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் […]

Continue Reading

உறுதியானது நயன்தாராவின் புதிய கூட்டணி!

“அறம்” திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் படங்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் ஒருபடி அதிகமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அவரும் அந்த பொறுப்பை உணர்ந்தவராய் அடுத்தடுத்தப் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் “கோலமாவு கோகிலா”, “விஸ்வாசம்”, சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என அதிக எதிர்பார்ப்பு மிக்க படங்களிலேயே நடித்து வருகிறார். இதில் “விஸ்வாசம்” படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார். இவை மட்டுமல்லாமல் “ஈரம்”, “ஆறாது சினம்”, “குற்றம்23” போஒன்ற படங்களை […]

Continue Reading

விஸ்வாசம் படப்பிடிப்பு எப்போது?

அஜித் – சிவா கூட்டணிக்கு “விஸ்வாசம்” நான்காவது படம். விவேகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததை அடுத்து சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனத்திற்கே மீண்டும் நடிப்பது என்ற அஜித்தின் முடிவால் தான் இந்தக் கூட்டணி மீண்டும் அமைந்தது. படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி வெகுநாட்களாகியும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை. டிசம்பரில் தொடங்கும் என சொல்லப்பட்ட விஸ்வாசத்தின் படப்பிடிப்பு மூன்று மாத காலமாகியும் தொடங்கவே இல்லை. வடசென்னை பின்னணியில் உருவாகும் படமென்பதால் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் […]

Continue Reading

வடசென்னை வாசியாகும் அஜித்!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் “விஸ்வாசம்”. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா “ஆரம்பம்” படத்திற்குப் பிறகு நடிக்கிறார். மேலும் முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான், அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கதை பற்றியோ, அஜித் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தோ இதுவரை எந்த தகவலுமே வெளிவராமல் ரகசியம் காக்கிறார்கள் படக்குழுவினர். எனினும் “விஸ்வாசம்” படத்திற்காக வடசென்னை பகுதிகளை அச்சு அசலாக பிரம்மாண்டமான […]

Continue Reading

100 படங்களுக்கு பிறகு விஸ்வாசம்!!

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாகிணைந்திருக்கும் “விஸ்வாசம்” படம் அறிவித்து நீண்ட நாட்கள் கழித்து தான், ஹீரோயின் நயன்தாரா என்பதையே அறிவித்தார்கள். இருந்தாலும், இசையமைப்பாள யார் என்பது குறித்த இழுபறி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் யுவன் ஷங்கர் ராஜா என்றார்கள். பிறகு யுவனே விலகிக் கொண்டதாக அறிவிப்பு வந்தது. மறுபடியும் அனிருத் தான் என்றார்கள். திடீரென “விக்ரம் வேதா” புகழ் சாம் சிஎஸ்-இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரையில் இசையமைப்பாளர் […]

Continue Reading

அஜித் ஜோடி இவரா? அவரா?

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் “விஸ்வாசம்”. படம் குறித்த அறிவிப்பு வந்ததோடு சரி, இன்று வரையில் அடுத்தகட்ட தகவல் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி, பிறகு விலகிக் கொண்டார். இது தவிர படம் குறித்த அப்டேட் எதுவுமே இல்லாமலேயே இருந்து வருகிறது. இருந்தாலும் சமூக வலைதளங்களில் எதையாவது கொளுத்திப் போடுவதையே சிலர் வழக்கமாக செய்து வருகிறார்கள். கதாநாயகி இவரா? அவரா? என இவர்களுக்கு தெரிந்த நடிகைகளின் பெயர்களாக எல்லாம் ஒரு […]

Continue Reading