“காலா” சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு – தனுசின் திட்டம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தினை தனுஷ் தனது “வுண்டர்பார் பிலிம்ஸ்” மூலம் தயாரித்துள்ளார். “கபாலி” படத்தில் புழுதி கிளப்பிய சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இந்த இசை வெளீட்டு விழாவில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவானது […]

Continue Reading

வேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்!!

  ஒருவழியாக ஒட்டுமொத்த திரையுலகினரின் கூட்டு முயற்சிக்கும், காத்திருப்பிற்கும் பலன் கிடைத்திருக்கிறது. “தமிழ் திரைத்துறை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மையமாக்கப்படும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு தமிழ் சினிமா இயங்கும்! தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் டிக்கெட் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும்” என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவித்து, கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Continue Reading

தனுஷ் தயாரிப்பில் ஹீரோவான இன்னொரு காமெடியன்!

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் “கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்”. நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் தனுஷின் “வுண்டர்பார் பிலிம்ஸ்” நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில், விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த தீனா கதாநயகனாக நடிக்கவிருக்கிறார். தீனா ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் “பவர் பாண்டி” படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

காலா ரிலீஸ் குறித்து அறிவித்த பா ரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி […]

Continue Reading

விஐபியின் அறிவிப்பை எதிர்பார்த்து ஆந்திரா

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, […]

Continue Reading

மலேசியாவில் முதல்முறையாக விஐபிக்கு 550

வருகிற ஆகஸ்ட் 11-ல் ரேசில் இதுவரை `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. இந்த ஆகஸ்ட் 11 ரேசில் இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் இணைந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக […]

Continue Reading