full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மில்க் பியூட்டி தமன்னாவுக்கு கிடைத்த புதுப்பட்டம்

`கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான `பாகுபலி’ அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அடுத்ததாக சிம்பு ஜோடியாக நடித்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம் எதிர்பார்ப்புக்கு இடையே விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில், தமன்னா தற்போது விக்ரம் ஜோடியாக `ஸ்கெட்ச்’, நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’ இந்தி ரீமேக், மற்றுமொரு பாலிவுட் படம் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே சர்வதேச அங்கீகார ஆணைக்குழு (CIAC) தமன்னாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த ஜுலை 22-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமன்னா டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். இதனை தமன்னா அவரது பேஸ்புக் பக்கத்தில், குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு முன்பாக உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திர சேகர், விக்ரமன், ஷங்கர், நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.