full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மனம் திறந்து பேசிய தமன்னா!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் முன்னணி ஹீரோயினாக நிலைத்து நிற்கும் நடிகைகளில் தமன்னாவிற்கு நிச்சயம் இடமுண்டு. சமீபத்தில்
இவர் நடிப்பில் வெளியான “ஸ்கெட்ச்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் சினிமா வாழ்க்கையில் அவரின்
வெற்றி-தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா.

அவர் அளித்த பேட்டி வருமாறு :-

“சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜமானது. ஆனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். சினிமாவுக்கு அறிமுகமான சமயத்தில்
படங்கள் தோற்றால் அதற்கு நான்தான் காரணம் என்று நினைப்பேன். வெற்றி பெற்றால் அதை மற்றவர்கள் கொண்டாடுவார்கள்.
தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றது எனக்கு தன்னம்பிக்கையை இழக்க செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அதனால் மனதுக்கும் சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன். படங்கள் வெற்றிக்கு நான்தான் காரணம்
என்று நினைக்கிறேன். அவரவர் வெற்றிக்கு அவரவர்தான் காரணம் என்று உணர்கிறேன். இது எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். படங்கள் வெற்றி பெறும்போது வெற்றிக்கு நான்தான் காரணம் என்று பெருமைப்படுங்கள்.
இதன் மூலம் உங்களை நீங்களே காதலிக்க ஆரம்பிப்பீர்கள். இப்போதெல்லாம் வெற்றிக்கு நான்தான் காரணம் என்ற நினைப்போடு
என்னை நானே நேசிக்க தொடங்கி இருக்கிறேன். வெற்றியை அனுபவிக்கிறேன். அந்த மகிழ்ச்சியில் மூழ்கி திளைக்கிறேன்.

இந்த உணர்வு வந்த பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நேர்மறை சிந்தனைகள் உருவாகி உள்ளன.
எதிர்மறை சிந்தனைகள் அகன்று விட்டன.”

இவ்வாறு தமன்னா கூறினார்.