தமன்னாவின் மாற்றத்திற்கு காரணம்

News
0
(0)

யோகா பயிற்சி மனதை மட்டுமல்ல, உடலை கட்டுக் கோப்பாக வைக்கிறது. எனவே பெரும்பாலான நடிகர், நடிகைகள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள்.

அனுஷ்கா யோகா ஆசிரியையாக இருந்து நடிகையானவர். இவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு செல்லும்போது, யோகா பயிற்சி பற்றிய ஆலோசனைகளை நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருகிறார். இவரை தொடர்ந்து பல நடிகைகள் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பள்ளியில், யோகா மாஸ்டர் ருஹீ என்பவரிடம் தீவிர யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கூறிய போது, “நான் எப்போதும் குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் ஐதராபாத்தில் உள்ள யோகா பயிற்சி பள்ளியில் சேர்ந்த பிறகு மிகவும் மாறியுள்ளேன். அங்கு எனக்கு யோகா பயிற்சி அளிக்கும் மாஸ்டர் முறையாக யோகாவை சொல்லிக் கொடுத்து வருகிறார்.

உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் உற்சாகமாக இருப்பது எப்படி என்பதை அவர் கற்றுத்தருகிறார். ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது அவருடைய நட்பு கிடைத்தது. அதிலிருந்து யோகா பயிற்சி பெற்று வருகிறேன்.

உண்மையாகவே யோகா பயிற்சி பெற்ற பிறகு நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இப்போது எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் யோகா செய்து வருகிறேன்”.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.