செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “

News
0
(0)

நவம்பர் ம் தேதி வெளியாகிறது

       செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும்  

                                ” தவம் “

                

இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் “ தவம் “ இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம்  வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஒளிப்பதிவு  –             வேல்முருகன்

இசை                 –              ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள்       –              இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்

கலை      –               ராஜு

எடிட்டிங்         –              எஸ்.பி.அகமது

நடனம்             –              ரவிதேவ்

ஸ்டண்ட்        –             ஆக்ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை  – குமரவேல்,சரவணன்

தயாரிப்பு  – வசி ஆஸிப்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆர்.விஜயானந்த் –  ஏ.ஆர்.சூரியன்

விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது படம். முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். விவசயாத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படம் இது. எல்லோரும் மறந்த ஒரு காதலை இந்த படத்தில் சொல்லியிருக்கோறோம் அது நிச்சயம் பெரிய வரவேற்பை பெரும்.

படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் அனைத்து கதாபாத்திரமும் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புது முக நடிகர் போல் தெரியவில்லை அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்று வெகுவாக பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் இது என்று  கூறினார்கள்.

 

இந்த படத்தை நிறைய முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தை  முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8 ம் தேதி உலகமெங்கு வெளியிடுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.