தமிழ் ராக்கர்ஸ்… தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தலைவலி அவனுங்க தான் தற்போதைக்கு.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து, பலர் இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கும் ஒரு படத்தை ரில்லீசாகும் அன்றே இணையத்தில் பதிவேற்றும் “சைக்கோ” திருடர்களாக
உருவெடுத்திருக்கிறார்கள். இவர்களின் அயோக்கியத் தனமான அட்டூழியத்தால் பல சிறு தயாரிப்பாளர்கள் இன்று முடங்கிப் போகும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி இருக்கிறது.
இப்படி அடுத்தவரின் உழைப்பை நவீனமாய்த் திருடும் இவர்களை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இன்று வரை பலன் கிடைத்த பாடில்லை.பல இயக்குநர்கள் நேரடியாக
அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், திருட்டுத் தனத்தை அவர்கள் விடாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் “தமிழ் ராக்கர்ஸ்” மாஃபியாவிற்கு நேரடியாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்,
“தமிழ் ராக்கர்ஸ் டீம், பிளீஸ் உங்களுக்கு இதயம் இருந்தால் இதை செய்யலாமா? இதற்காகத்தான் கடுமையாக உழைத்திருக்கிறோம். பல திரை உலக பிரச்சினைகள், வரி பிரச்சினைகள்
ஆகியவற்றை கடந்து தான் படங்கள் வெளியாகி உள்ளன. எனவே, இதை செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர், “சென்னை டூ சிங்கப்பூர்” படத்தின் இயக்குநர் அப்பாஸ் அக்பரும் இதேபோல் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
திருட்டுப் பூனைக்கு சூடு வைக்காமல், கெஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது தான்.