தமிழ்க்குடிமகன் – திரைவிமர்சனம்
சேரனின் தமிழ்க்குடிமகன் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றுகிறதா இல்லை தூற்றுகிறதா என்று பார்க்கலாம்.
சேரன்,லால்,ஸ்ரீ பிரியங்கா,வேலா ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர்,அருள் தாஸ்,துருவா,ரவி மரியா,தீப்சிகா,மயில்சாமி மற்றும் பலர் நடிப்பில் சாம் சி,எஸ்இசையில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தமிழ்க்குடிமகன்.
தொழிலை வைத்து சாதி பிரிக்கும் இந்த சமூகத்ததில் ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் எப்படிப்பட்ட துன்பங்களை சந்திக்க நேரிகிறது. இப்படி சாதியால் அவமானம் படும் சிலரை எப்படி மீட்க்க என்ன செய்யவேண்டும் என்ற தீர்வை சொல்லி இருக்கும் படம் தான் தமிழ்குடிமகன்.
சலவைத்தொழில் மற்றும் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் தொழிலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சேரன், அத்தொழிலையும், அத்தொழில் செய்பவர்களையும் ஊர் மக்கள் இழிவாகப் பார்ப்பதால் அப்படிப்பட்ட தொழிலே தனக்கு தேவையில்லை என்று முடிவு செய்து, வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார். ஆனால், எந்த நிலைக்கு போனாலும் சரி, எப்படி மாறினாலும் சரி, இன்னார் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு ஊர் மக்கள் சேரனுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார்கள். அவற்றை சமாளித்து தனது நிலையை மாற்றியே தீருவேன் என்ற போராட்ட குணத்தோடு சேரன் பயணிக்கிறார்.
இதற்கிடையே ஊர் பெரியவர் இறந்துவிட, அவரது உடலை அடக்கம் செய்ய சேரனை அழைக்கிறார்கள். அவர், இனி அந்த தொழிலை நான் செய்யப்போவதில்லை என்று மறுக்கிறார். தங்களை மீறி சேரன் இயங்குவதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, இந்த விவகாரத்தில் சட்டம் தலையிட, பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போகிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சேரன் பிரச்சனைக்கு மட்டும் ஒன்றி ஒட்டு மொத்தமாக சாதி பாகுபாட்டினால் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை மாறுவதற்கான தீர்வு ஒன்றை கொடுக்கிறது, அது தான் ‘தமிழ்க்குடிமகன்’.
சேரனிடம் மீண்டும் ஒரு சிறந்த எதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் பார்க்கமுடிந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் சேரன் அவருக்கான கதையம்சம் கொண்ட படத்தில் பார்க்கும் பொது படத்துடன் நாமும் ஒன்றிப்போகிறோம்.இருந்தும் காட்சிக்கு ஏற்ப அவரை மாற்றாதபோது கொஞ்சம் வருத்தம் கொடுக்கிறது. ஒரு மனிதனுக்கு கோவம் வரும் பொது அவனுக்கு தெரியாமல் அவனுள் இருக்கும் ஒரு மிருகம் வெளிப்படும் ஆனால் சேரன் கோவத்திலும் மிகவும் சாந்தமாக இருப்பது வருத்தம்.
உயர்ந்த சாதி வரகத்தினாராக வரும் லால் தனது அனுபவம் கலந்த அற்புதமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவருகிறார். அதோடு கதாபாத்திரத்துக்கு பலமும் சேர்க்கிறார்.போலீசும் சட்டமும் அவர்களுக்குத்தான் என்றால் அப்பா நாம யாரு என்று பேசு இடத்தில் மிகவும் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து நடித்து இருப்பது பாரடடக்குறியது.
சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக நடித்திருக்கும் தீபிக்ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு மிக பெரிய பலம் கதைக்களத்தை புரிந்து அதற்க்கு உயிரும் உணர்வும் அவரின் ஒளிப்பதிவில் தெரிகிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னை இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது இயக்குனரின் இசையமைப்பாளராக சாம் வளம் வருகிறார்.
படத்தில் காட்சிகளை விட கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம் அதோடு கதையின் போக்குமாறாமல் படம் நகர்கிறது இதற்க்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
குறிப்பிடட சமூகத்திறனுக்கு ஆதரவான படம் என்று சொல்லுவதை விட அந்த சமூகத்தினர் படும் கஷ்டங்களை கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.அந்த சமூகத்தினரின் வலிகளும் வேதனைகளை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த சமூகத்தினர் பாதை மாறவேண்டும் இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை தன் திரைக்கதை மூலம் மிகவும் அற்புதமாமாக சொல்லி இருகிற்றார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் .
மொத்தத்தில் தமிழ்குடிமகன் பிரச்சனையை மட்டும் சொல்லவில்லை தீர்வையும் சொல்லி இருக்கிறார். தமிழ்குடிமகன் ரசிக்கலாம்