பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

General News
0
(0)

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெற இருக்கும் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு. ஷெல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ராமலிங்கம், திரு.கு. க. செல்வம் திரு. ஆர். கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி.கண்மனி, திரு. பிரமீட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை மலரட்டும்- தமிழகம் வளரட்டும் என்ற Tag Live வெளியிடப்பட்டது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.