full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திருமணம் குறித்து வெட்கத்துடன் பதிலளித்த தாப்ஸி

கிரிக்கெட் வீரர் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இது இத்தாலியில் ரகசியமாக நடந்தது. இந்த நிலையில், இந்தி பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாப்சியிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

விரைவில் உங்கள் திருமணத்தை எதிர்பார்க்கலாமா? என்று நிருபர்கள் கேட்க அதற்கு பதில் அளித்த டாப்சி, “தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார். உடனே அவரிடம், “இப்போதெல்லாம் ஸ்பெயின் அல்லது இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்கிறார்களே… என்று கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் பற்றி இந்தி நடிகர் சாகிப் சலீம் குறிப்பிட அதற்கு பதில் அளித்த தாப்சி, “என் திருமணத்தை மறைக்க மாட்டேன்” என்று வெட்கத்துடன் கூறினார்.

ஏற்கனவே தாப்சி அளித்த பேட்டியில், “நான் எந்த தொழில் அதிபரையோ, விளையாட்டு வீரரையோ திருமணம் செய்து ஊடகங்களை பரபரப்பாக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். இது கோலி – அனுஷ்கா சர்மா பற்றிய விமர்சனம் என்று கூறப்பட்டது. இப்போது “ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்” என்று பதில் அளித்ததும் அதே ஜோடியை மறைமுகமாக விமர்சனம் செய்யத்தான் என்று கூறப்படுகிறது.