full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா

ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். அந்த பெண் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். இதுபோல் அடுத்து அந்த மாநிலத்திலேயே 22 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு உள்ளார். இந்த பாலியல் வன்கொடுமைகளை நடிகை ஆண்ட்ரியா கண்டித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் ஒழிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப்போவது இல்லை. பெண் மீதான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அவள் மீது எந்த தவறு சொல்ல முடியாது. இந்திய தாய்மார்கள் தங்கள் மகன்களை ஒழுங்குப்படுத்துங்கள். பெண்களை மதிப்பதற்கு அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் உங்கள் மகனை சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறுங்கள். அதுவே பாதுகாப்பு என்றும் அறிவுறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.