டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

cinema news News
0
(0)

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது.

D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்களித்திருக்கிறார்.

இதனை முன்னிட்டு அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சென்னை காசி டாக்கீஸ் திரையரங்கில் இசையமைப்பாளர்
D. IMMAN, இயக்குனர் Prabhu Solomon -வுடன் படம் பார்த்து படத்தில் நடித்த பதிமூன்று குழந்தைகளுடன் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக குடும்பத்தினருடன் ரசிக்கும் படி படம் எடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
படம் கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது என இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்தார்.

நல்ல கதையம்சத்தோடு எந்த காலகட்டத்தில் வெளியானாலும் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு TEENZ படம் ஒரு உதாரணம் என நடிகர், இயக்குனர் பார்த்திபன் நெகிழ்ந்தார். படத்தில் பணியாற்றிய பதிமூன்று குழந்தைகளுக்கு அவர்கள் படத்தில் கொடுத்த ஒத்துழைப்புகளுக்காகவும், சிறந்த நடிப்பிற்க்காகவும் Bonus – ஆக அன்பு முத்தங்களை பரிசாக தந்தார். பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும்
தன்னுடன் இணைந்து பணியாற்றிய யாவருக்கும் பார்த்திபன் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்

TEENZ
THANKZ
MEET – எனும் நிகழ்வின் மூலம்!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.