தலைநகரம் 2 – திரைவிமர்சனம்
தலைநகரம் V.Z. துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்திருக்கும் படம் தலைநகரம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு கேங்ஸ்டர் படம் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் துரை சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதைக்களம் பழசு என்றாலும் திரைக்கதை புதுசு அதிலும் விறுவிறுப்பாக பணத்தை கொடுத்து இருப்பது சிறப்பு
இருந்தும் படத்தில் நெருடலான விஷயங்கள் என்று சொன்னால் அதிகமான கொலைக்காட்சிகள் படம் முழுக்க அடிக்கும் ரத்த வாடை குறிப்பாக நஞ்சுண்டன் ரைட் என்கின்ற சுந்தர்சியை 17 முறை கத்தியில் வெட்டுவது இது போன்ற பல இடங்களில் ரத்த காட்சிகள் அதிகமாக இருக்கிறது
சரி படத்தின் கதையை பார்ப்போம் சென்னை மூன்று பிரிவு தென் சென்னை மத்திய சென்னை வடசென்னை அது போல தான் இந்த படத்திலும் மூன்று பிரிவுகளாக பிரித்து மூன்று ரவுடிகள் இந்த சென்னை மாநகரை வதம் செய்து வருகின்றனர் இதில் மூவருக்கும் ஒரே தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரை ஒருவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இந்த மூன்று ரவுடிகள் கிடையே காலத்தின் கட்டாயமாக ரைட் என்கின்ற சுந்தர் சி இவர்களுடன் மோத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். இதனால் இந்த மூவரும் ரைட்டை குறி வைக்கிறார்கள் எப்படி சரிந்தார்கள் என்பது தான் மீதி கதை மற்றும் திரைக்கதை.
சுந்தர் சி தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமில்லை ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோ என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். கதை ஓட்டம் புரிந்து இயக்குனருக்கு மிக பக்கபலமாக இருந்து தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிற சுந்தர் சி பல இடங்களில் சுந்தர்சி கைதட்டில் பெறுகிறார் ரசிகர்களிடமிருந்து.
நாயகி பல்வ லல்வாணி ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கதாநாயகி என்றால் சும்மா நான்கு காட்சிகளுக்கு வலம் வருவது போல் இல்லாமல் ஒரு வலுவான கதா பாத்திரத்தில் வலம் வருகிறார் இந்த நாயகி இது தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
ஆயிரா தம்பி ராமையா ஜெய் ஸ்ரீ ஜோஸ் விஷால் ராஜன் பிரபாகர் சேரன் ராஜ் இவர்களும் தன் பணிக்கு சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிப்ரல் இசை பின்னனி இசையில் கலக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் பாடல்கள் பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை
இயக்குனர் துரை தலைநகரம் படத்தை ஒரு கேன்சர் படமாக கொடுத்திருப்பது ஒரு முறை பார்த்து ரசிக்கும் படியாக தான் உள்ளது கொஞ்சம் ஆக்ஷன் காட்சிகளை குறைத்து இருந்தால் படம் மிகச் சிறந்த பணமாக அமைந்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் என்பது வெட்டுக்குத்துகளுக்கு குறைத்து இருந்தால் படம் மிக நன்றாக இருந்திருக்கும்
தலைநகரம் மொத்தத்தில் கொலை நகரம்