தலைவர்164 படத்தின் டைட்டில் வெளியீடு

News

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் வெளியிட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன் படி இன்று காலை 10 மணிக்கு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வரும் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ள காலா படத்திற்கான படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.