full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது.

யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது.

தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு ரசித்தவர்கள் ஆரோக்கியமானது … ஆத்மார்த்தமானது… தென்றலாக தாலாட்டுகிறது…பெருங்களிப்பை வழங்குகிறது..என பாராட்டுகிறார்கள். இந்த இணையத் தொடரின் நாயகனான அபிஷேக் குமார் – இந்த தொடரில் நகர்ப்புற கிராம செயலாளர் சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் பிரபலமான தமிழ் சேனலான குக்ட் – உடன் இணைந்து சமீபத்தில் மகிழ்ச்சியான சமையல் சாகசத்தில் ஈடுபட்டார் . ராஜீவ் இம்மானுவேல் மற்றும் நிர்மல் ஆகியோருடன் அபிஷேக் இணைந்து சுவையான… நாவிற்கு ருசியான.. முருங்கைக்காய் பிரியாணியை தயாரித்தார்.

ஒரு நகைச்சுவையான நிகழ்வுகளில் குக்ட் குழுவினர் தங்களின் சிக்கன் பிரியாணிக்கான முக்கிய மூலப் பொருளை காணவில்லை என்பதை உணரும்போது.. அவர்கள் ஒரு சங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் அதிர்ஷ்டவசமாக முருங்கக்காய் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உள்ளூரின் நிபுணரான அபிஷேக் எனும் கிராம செயலாளரான சித்தார்த்தை அவர்கள் சந்திக்கிறார்கள். பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களுடன் அவர்கள் தங்கள் சமையல் சாகசத்தில் வெற்றி பெறுகிறார்களா..? என்பதை அந்தக் காணொளியில் காண்பது உற்சாகமாக இருக்கும்.

இதற்கான வீடியோவை இங்கே பார்க்கவும்…

எட்டு அத்தியாயங்கள் கொண்ட நகைச்சுவை இணைய தொடர் தலைவெட்டியான் பாளையம். தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலை வெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் பெரிய நகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை விவரிக்கிறது இந்த இணைய தொடர். இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவான இந்த இணையத் தொடரை பாலகுமாரன் முருகேசன் எழுதி, தி வைரல் பீவர் (TVF) எனும் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த குடும்ப பொழுதுபோக்குடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் அதில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தலை வெட்டியான் பாளையம் தற்போது தமிழில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாகி இருக்கிறது.