தளபதி’ விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’

cinema news Pooja
0
(0)

தளபதி’ விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், ‘தளபதி’ விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “தளபதி 69” துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது.

“தளபதி 69” படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய ‘தளபதி’ விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார். அதிரடியான, உணர்ச்சிகரமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இந்த படம் இருக்கும் என்பது உறுதியாகிறது.

கே. வி. என் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பேசியபோது, “தளபதி 69 படத்திற்காக இதுபோன்ற நம்பமுடியாத படக்குழுவை ஒன்றிணைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ‘தளபதி’ விஜய்யின் காந்தம் போன்ற அவரது ஈர்ப்பு, எச். வினோத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் அனிருத்தின் மிரட்டலான இசை ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பது உறுதி”,என்றார். ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோஹித் என். கே. ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, மோனிஷா பிளஸ்ஸி, ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், கலை இயக்குனர் செல்வகுமார், ஆடைவடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என். கே ஆகியோர் அடங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பூஜை விழாவில் கலந்து கொண்டு சுமூகமான மற்றும் வெற்றிகரமான படப்பிடிப்புக்காக வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பாரம்பரிய வேட்டி சட்டையில் ‘தளபதி’ விஜய் வருகை புரிந்ததால் படக்குழுவினருக்கு உற்சாகம் அதிகரித்தது, பின்னர் அவர்களுடன் உரையாடியதுடன், படப்பிடிப்பு தொடங்குவதனால் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றொரு தரமான, இசை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கும் பாடல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இது மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு அவரது தனித் தன்மையான இசையை அளிப்பார் என்பது உறுதியாகிறது. படத்தின் கதையோட்டத்தை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், அதிரடியான பாடல்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசை பாடல்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கலாம்.

படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதால், ‘தளபதி’ விஜய்யின் புகழ்பெற்ற திரைவாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை உருவாக்க படக்குழு உறுதி ஏற்று ஒரு சிறந்த பயணத்தை துவக்கியுள்ளது.

*நடிகர்கள்:*
‘தளபதி’ விஜய்
பூஜா ஹெக்டே
பிரகாஷ் ராஜ்
கௌதம் வாசுதேவ் மேனன்
பாபி தியோல்
பிரியாமணி
நரேன்
மமிதா பைஜு
மோனிஷா பிளஸ்ஸி

*படக்குழு:*
இயக்குனர்: எச் வினோத்
தயாரிப்பு: கே. வி. என் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்: வெங்கட் கே. நாராயணா
இணை தயாரிப்பாளர்கள்: ஜெகதீஷ் பழனிசாமி, லோஹித் என். கே.
இசையமைப்பாளர்: அனிருத்
ஓளிப்பதிவாளர்: சத்யன் சூரியன்
படத்தொகுப்பாளர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குனர்: செல்வகுமார்
சண்டைப் பயிற்சி இயக்குனர்: ‘அனல்’ அரசு
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது (V4U Media)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.