தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவித்தபடி தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் விஜய் 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் Master என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் தளபதி விஜய் படு மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க பிரிட்டோ தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.